மழை வேண்டி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :3806 days ago
திருவண்ணாமலை: பெரணமல்லூர் அடுத்த கட்டமங்கலம், மாரியம்மன் கோவிலில், சித்திரை மாதத்தை முன்னிட்டு கடந்த, 1ம் தேதி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மதியம், ஒரு மணி அளவில் கிராம பொதுமக்களால் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நடந்தது. இரவு, 8 மணிக்கு மேல் மழை வேண்டியும், திருமணத்தடை, குழந்தை வரம் வேண்டியும், 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை மற்றும், 108 பால் குட அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.