வெள்ளையூர் இருசாயி அம்மன் கோவிலில் சிலைகள் பிரதிஷ்டை
ADDED :3806 days ago
உளுந்தூர்பேட்டை: வெள்ளையூர் இருசாயி அம்மன் கோவிலில் முருகன், விநாயகர் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான சிறப்பு பூஜைகள் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா வெள்ளையூர் இருசாயி அம்மன் கோவிலில் கடந்த 2 மாதங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து கோவிலில் முருகன், விநாயகர் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு கோ பூஜை செய்யப்பட்டு, சுவாமி சிலைக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்து, பிரதிஷ்டை செய்யப்பட்டன. சென்னை ஐகோர்ட் மூத்த வழக்கறிஞர் அய்யாதுரை தலைமையில், தர்மகர்த்தா ராமசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் மனோகரன், வி.ஏ.ஓ., அன்பழகன், கிராம பிரமுகர்கள் இளங்கோபிரபு, நெடுமாறன், தெய்வீகன், ராமகிருஷ்ணன், பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.