உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாட்டப்பன் ஸ்வாமி கோவில் மே 7ல் திருவிழா கோலாகலம்

பாட்டப்பன் ஸ்வாமி கோவில் மே 7ல் திருவிழா கோலாகலம்

ராசிபுரம்: வெண்ணந்தூர் பாலித்தெரு செல்லமுத்து மாரியம்மன், பாட்டப்பன் கோவில் திருவிழா, மே, 7ம் தேதி நடக்கிறது. ராசிபுரம் அடுத்த, வெண்ணந்தூர் பாலித்தெருவில், செல்லமுத்து மாரியம்மன், பாட்டப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த, 19ம் நூற்றாண்டு முதல், திருவிழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில், கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த, 2014ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவில் திருவிழா, மே, 7ம் தேதி நடக்கிறது. முன்னதாக, கடந்த, 24ம் தேதி கும்பாபிஷேகம் முடிந்து, முதலாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த, 28ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. தினமும் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மே, 7ம் தேதி, காலை, 8 மணிக்கு பொங்கல் வைத்தும், மாவிளக்கு பூஜையும் நடக்கிறது. 8ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !