பிரான் என்றால் என்ன?
ADDED :3912 days ago
கடவுளை வணங்கும் போது எம்பிரானே என்று சொல்வதுண்டு. இதற்கு என் உள்ளத்தை விட்டுப் பிரியாதவனே என்று பொருள். நான் இறைவனுடைய சந்நிதியில் இருக்கிறேன். அவன் என்னை ஒவ்வொரு கணமும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என எப்போதும் நான் நினைக்கிறேன். எனவே என் உள்ளத்தில் பாவ நினைவு எழுவதில்லை. அதனால் தான் அவனை எம்பிரானே என அழைக்கிறேன், என்கிறார் வாரியார்.