உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழுவகையான இலிங்கங்களைப் பூசித்தற்கு உரிய ஆகமங்கள்!

ஏழுவகையான இலிங்கங்களைப் பூசித்தற்கு உரிய ஆகமங்கள்!

சொல்லரிய ஆகம மோரேழு நான்குவகை
சுவாயம்பு வந்த னிலுனைச்
சூக்குமம் காரணம் வாதுளா கமமுடன்
தோன்று சுப்பிர பேதமே
நல்லவர்சொல் இந்நான்கின் வழிபூசை புரிதரவு
நல்தெய்வி கந்த னிலுனை
நவில்சுவா யம்புவங் காமிகம் விசயமுடன்
நாடுமன வாகமத்தும்
மல்கா ணவம்சிதைய சிந்தியம் தீப்தமொடு
வளர்சகத் திரம்அ சிதமா
வழிபுரிந் திடவும்ஆ ரிடமதை அம்சுமான்
இரௌரவமி யோக சம்சேர்
செல்லுநிசு வாசமுறை நற்பூசை நாடொறும்
செய்யஅடி யர்க்க மைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

மேவுமா னுடலிங்க மதனைவிம லோற்பேத
மிக்க சந்திர ஞானமே
வீரமுயர் விம்பாக மத்துமுறை புரியவும்
வீரிராக் கதவ டிவினைத்
தாவியபு ரோற்கீத லளிதமுயர் சித்தமொடு
சந்தான ஆக மத்தும்
சந்ததமும் வாணமதை மகுடமுயர் கீரணம்
சருவோத்த ஆக மமுடன்
ஓவில்பர மேச்சுரா கமவிதியி னாலுமன்
புடையநல் லோர்க ளென்றும்
ஓங்குபூ சனைபுரிவர் என்றுபா கத்துறைந்து
உலகீன்ற தாய்க்கு ரைத்தாய்
தேவர்புகழ் முனிவர்மூ வாயிரவர் நற்பூசை
தெய்வமறை வழியின் ஆற்றும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !