அவரவர்கள் பூசிப்பதற்கு உரிய சிவலிங்க மூர்த்தங்கள்
ADDED :3875 days ago
வாலுகந் தண்டுலமொ(டு) அன்னலிங் கார்ச்சனைகள்
மறையோது பூசு ரர்க்காம்
மாசில்கோ மயம்வெண்ணெய் நன்மிருத் திகைமூன்று
மன்னவர்செய் பூச னைக்காம்
கோலமுறு பல்லவ விலிங்கமாக் கந்தமிவை
கூறுமுறை வைசி யர்க்காம்
கூர்ச்சமலர் மாலைகுள மூவிலிங் கார்ச்சனைகள்
கோதறுச துர்த்த ருக்கே
நாலுளது சேடலிங் கந்தவை மாசைவ
நான்மறைப் புனித ராதி
நால்வகைச் சொன்மரபர் யாவர்க்கு மாமென்று
நவிலஞ்சு மானு ரைத்தாய்
சீலமறை முனிவர்மூ வாயிரவர் விதிப்படி
தினம்பூசை செய்து வாழும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.