இரதலிங்க பூசையின் சிறப்பு
ADDED :3830 days ago
இரதலிங் கந்தனைத் தெரிசித்த அக்கணத்(து)
எப்பெரும் பவமும் நீங்கும்
இவ்விலிங் கந்தன்னை ஒருதினம் அருச்சிக்கில்
எண்ணில் காமியப லனுறும்
பரிவொடிரு தினமருச் சனைகள்செய் தாற்சகல
பாக்கிய மும்மேன் மேலுறும்
பத்தியொடு மூன்றுதினம் அர்ச்சனைகள் ஆற்றிலோ
படிவானம் அதலத் தும்வாழ்
பெரியசிவ லிங்கமுழு தும்பூசை யாற்றுமுயர்
பேறுதரும் அவ்வி லிங்கம்
பேணியனு தினம்ஆற்றி னால்அயுதம் ஆயிரம்
பிரம கத்திகள் போம்எனத்
திருவாது ளாகமம் தனிலம்பி கைக்குநீ
செப்பினாய் உலகம் உய்யச்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.