உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி கோவிலில் திருவிளக்கு பூஜை!

அங்காள பரமேஸ்வரி கோவிலில் திருவிளக்கு பூஜை!

கடலூர்: கடலூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிளக்கு பூஜை நடந்தது. கடலூர், திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம்  ரோட்டில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி 8ம் ஆண்டு திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு நேற்று  முன்தினம் செய்யப்பட்டிருந்தது. அன்றைய தினம் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடந்தது. இதில்,  ஏராளமான பெண்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !