உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சத்தியநாராயண பூஜை!

கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சத்தியநாராயண பூஜை!

சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சத்தியநாராயண பூஜை நடந்தது. சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன்  கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, தங்கதேரில் வெள்ளியால் உருவான சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சத்திய நாராயண பூஜை, பவுர்ணமி பூஜை செய்து தீபாராதனை நடந்தது. குருக்கள் கணேஷ் சர்மா தலைமையில் பக்தர்களுக்கு, நிலாசோறு வழங்கப்பட்டது.  விழா ஏற்பாடுகளை விழா குழுவைச் சேர்ந்த தியாகராஜன், வேலுமணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !