உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி கோவிலில் நித்திய ஆராதனை திட்டம் துவக்கம்!

அங்காள பரமேஸ்வரி கோவிலில் நித்திய ஆராதனை திட்டம் துவக்கம்!

புதுச்சேரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ‘நித்திய ஆராதனை கட்டளை’ திட்டத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். புதுச்சேரி,  சின்ன சுப்ராயப் பிள்ளை வீதியில் உள்ள அங்காள  பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ‘நித்திய ஆராதனை கட்டளை‘ துவக்க விழா நேற்றிரவு நடந் தது. கோவில் வளாகத்தில் இரவு 7:30 மணிக்கு  நடந்த நிகழ்ச்சிக்கு,   முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி,  ‘நித்திய  ஆராதனை கட்டளை‘ திட்டத்தை  துவக்கி வைத்தார். லட்சுமிநாராயணன்  எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்து, கோவில்  அற ங்காவலர் குழு தலைவர் விஜயக்குமார், நிர்வாக  அதிகாரி ஜெனார்த்தனன் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். ‘நித்திய ஆராதனை கட்டளை‘  திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய்  செலுத்தினால், பிறந்தநாள் அல்லது திருமண நாள் போன்ற நாட்களில், அவர்களது  பெயரில் சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டு, அதற்கான பிரசாதம் வீட்டிற்கே  அனுப்பி வைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !