உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வன்னிய பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்!

வன்னிய பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்!

புதுச்சேரி: முதலியார்ேபட்டை வன்னிய பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றதுடன் துவங்கியது. நேற்று முன்தினம் பெருமாள் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.  நேற்று காலை 9:00 மணிக்கு கொடியேற்றம், மாலையில் இந்திர  விமானத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. இன்று (7ம் தேதி) புருஷசுக்த ஹோமம், சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 8ம் தேதி ஹயக்கிரீவர்  ஹோமம், சேஷ வாகன புறப்பாடு, 9ம் தேதி சுக்த, லட்சுமி ஹோமம், கருட சேவை புறப்பாடு நடக்கிறது. 11ம் தேதி சுதர்சன ஹோமம், யானை  வாகனத்தில் புறப்பாடு, 12ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 14ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி  சீனுவாசன் மற்றும் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !