வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை!
ADDED :5215 days ago
மதுரை: தினமலர் இதழில் ஜூன் 14 ல் பாதுகாக்கப்படுமா தொல்லியல் இடங்கள்? என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கலெக்டர் சகாயம் நடவடிக்கை எடுத்துள்ளார். அவரது அறிக்கை: மதுரை மாவட்டத்தில் பாரம்பரியமிக்க கோயில்கள், கல்வெட்டுகள், வரலாற்றுச் சின்னங்கள், நீர்நிலைகளை அடையாளம் கண்டு பாதுகாப்பது நம் கடமை. இவை ஆக்கிரமிக்கப்பட்டு, சிதிலமடைந்துள்ளது. வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. நம் வரலாற்று பெருமை, கலாசார மேன்மையை வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்ல முடியும் என்ற அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் திட்டம் தீட்டியுள்ளது. இது பற்றி தன்னிடம் தகவல் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.