உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூரில் நாளை பூமாயி அம்மன் பூச்சொரிதல்

திருப்புத்தூரில் நாளை பூமாயி அம்மன் பூச்சொரிதல்

திருப்புத்தூர் : திருப்புத்தூர் பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழா நாளை நடக்கிறது. வசந்தப் பெருவிழா வரும் 9ம் தேதி துவங்குகிறது. திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் சித்திரையில் பூச்சொரிதல் விழா நடைபெறும். நாளை அதிகாலை அம்மனுக்கு பூஜையுடன் விழா துவங்குகிறது.காலை 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின்னர் அம்மன் ராஜ அலங்காரத்தில் அருள்பாலிப்பார். பக்தர்கள் பால்குடம், பூத்தட்டு எடுத்து பூச்சொரிந்து அம்மனை வழிபடுவர். மதியம் 2 மணிக்கு அபிஷேகத்திற்கு பின் அம்மன் சந்தனக்காப்பில் காட்சி தருவார். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு மேல் புஷ்ப அலங்காரம் நடந்து அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறும்.தொடர்ந்து சிறப்பு தீபாராதனை, அன்று இரவு 7 மணிக்கு அம்மனுக்கு கொடியேற்றி, காப்புக் கட்டி 10 நாள் வசந்தப் பெருவிழா துவங்கும்.அம்பாள் திருக்குளத்தை பவனி வருவார். மே 18ல் பத்தாம் திருநாளான மாலை பொங்கல்விழா ,அம்பாள் திருவீதி உலா நடைபெறும். தொடர்ந்து காப்புக் கலைந்து மஞ்சள் நீராட்டு நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !