உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல்லடம் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா

பல்லடம் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா

பல்லடம் : ப.வடுகபாளையம் விநாயகர், ஸ்ரீமாகாளியம்மன், ஸ்ரீதுர்கை அம்மன் கோவில் பொங்கல் மற்றும் பூச்சாட்டு விழா நேற்று நடந்தது. இக்கோவிலில் பூச்சாட்டு விழா, கடந்த வாரம் துவங்கியது. அதன்பின், ஊர்சுற்றி சோறு போடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம், விநாயகருக்கு பொங்கல் வைத்து வழிபடுதல், சாமியை கோவிலுக்கு எடுத்து வருதல், அரண்மனை சீர் எடுத்து வருதல், சக்தி அழைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று, மாவிளக்கு எடுத்தல், காலை 9:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை மற்றும் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று மஞ்சள் நீராட்டு விழா. சக்தி கலசம் கங்கையில் விடும் பூஜை நடைபெற உள்ளது. நாளை மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !