பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் தேர் திருவிழா
ADDED :3806 days ago
புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் திருவிழா, கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு கூத்தாண்டவருக்கு திருக்கல்யாணம், திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்வு நடந்தது.இரவு 7:00 மணிக்கு, திருநங்கை யருக்கான அழகிப் போட்டி நடந்தது. இதில், புதுச்சேரி, தமிழகம், கேரளா மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டனர். நேற்று காலை கூத்தாண்டவர் தேர் திருவிழா நடந்தது. மாலை 4:30 மணிக்கு அழுகள நிகழ்ச்சி நடந்தது.