உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீதா- ராம கல்யாண மஹோத்ஸவம் விழா

சீதா- ராம கல்யாண மஹோத்ஸவம் விழா

திருச்சி, : கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, நடு அக்ரஹாரத்தில், சீதா- ராம கல்யாண மஹோத்ஸவம் விழா, இன்று துவங்கி, மே, 14ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று காலை, 5 மணிக்கு சீனு கானபாடிகள் மற்றும் பிரசன்ன சாஸ்திரிகள், கணபதி ஹோமம் செய்ய உற்சவம் துவங்குகிறது. தொடர்ந்து, அர்ச்சனையும், உஞ்சவிருத்தியும் நடைபெறும். காலை, 10 மணிக்கு அகண்டதாரக ராம மந்திர ஜெபமும், மாலை 6 மணிக்கு விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணும் நடைபெறும்.நாளை, (8ம் தேதி) காலை, 7.30 மணிக்கு லட்சார்ச்சனையும், பூர்த்தியாகி மஹா தீபாராதனை, திருவிளக்கு பூஜை நடைபெறும். 9ம் தேதி காலை, 8 மணிக்கு உஞ்சவிருத்தியும், தொடர்ந்து பாகவத பக்த ஆராதனை நடைபெறும். 10ம் தேதி காலை, 8 மணிக்கு கொட்டனோத்ஸ்வமும், விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக காலை, 11.55 மணிக்கு சீதா-ராம கல்யாணம் நடைபெறும்.இறுதி நாளான, 11ம் தேதி காலை, 7 மணிக்கு உபயதாரர்கள் அர்ச்சனை நடைபெறும். விழாவில் புஷ்ப அலங்காரங்களை கிருஷ்ணராயபுரம் மதுராநாதனும், உற்சவ ஏற்பாடுகளை திருச்சி, தேசிய கல்லூரி பேராசிரியர் சுந்தரராமன் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !