மாகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா கோலாகலம்!
ADDED :3805 days ago
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் பாக்குக்கார வீதி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா நடந்தது. கடந்த மாதம், 21ம் தேதி பூச்சாட்டுடன் விழா துவங்கியது. 28ம் தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. அன்று முதல், 5ம் தேதி வரை சுவாமிக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைத்து வரப்பட்டது. தலைமை பூசாரி குப்புசாமி, குண்டத்திற்கு பூஜை செய்து, முதலில் இறங்கினார். தொடர்ந்து உதவி பூசாரி மதன்குமார் மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் ஆகியோர் குண்டம் இறங்கினர். அம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று அபிஷேக பூஜையும், 11ம் தேதி மறுபூஜையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.