கூவாகம் கோவிலில் 130 கிராம் தங்கம் காணிக்கை!
ADDED :3806 days ago
திருவெண்ணெய்நல்லுார்: விழுப்புரம் மாவட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை விழா கடந்த 21ம் தேதி துவங்கியது. கடந்த 5ம் ÷ ததி நடந்த சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சியில், திருநங்கைகள் பூசாரிகளின் கையால் தாலிக்கட்டிக் கொண்டனர். மறுநாள் (6ம்தேதி) நடந்த அழுகளம் நிகழ்ச்சியில், திருநங்கைகள் தாலியை அறுத்து விதவைக் கோலம் பூண்டனர். அப்போது, அவர்கள் அணிந்திருந்த தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன மாங்கல்யத்தை கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, கணக்கர் பிரபாகரன் ஆகியோரிடம் கொடுத்து, ரசீது பெற்றுக் கொண்டனர். இந்தாண்டு 130 கிராம் (16.25 சவரன்) தங்கம், 23 கிராம் வெள்ளி காணிக்கையாக பெறப்பட்டது.