உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயில் பிரசாத ஸ்டால் ஏலம் ஒத்திவைப்பு

பழநி மலைக்கோயில் பிரசாத ஸ்டால் ஏலம் ஒத்திவைப்பு

பழநி: பழநி மலைகோயிலில் லட்டு, அதிரசம், முறுக்கு, புட்டமுது, தேன் குழல், சித்ரான்னங்கள் விற்கப்படுகிறது. இதனை தனியார் ஏலம் எடுத்து நடத்தி வருகின்றனர். கடந்தாண்டு ரூ.3.60கோடிக்கு ஏலம் போனது. இந்த ஆண்டுக்கான டெண்டர் திறப்பு மற்றும் பொதுஏலம் நடந்தது. இந்துசமய அறநிலைத்துறை மதுரை மண்டல இணைஆணையர் நடராஜன், பழநிகோயில் இணைஆணையர் (பொ) ராஜமாணிக்கம் முன்னிலைவகித்தனர். இதில் பிரசாத ஸ்டால் உரிமத்திற்கு ரூ.4.9கோடி என கோயில் நிர்வாகம் நிர்ணயித்தது. ஆனால் ஏலதாரர்கள் ரூ.3.83 கோடிக்கு கேட்டனர். டெண்டரை திறந்தபோது அதில் ரூ.3.60கோடி குறிப்பிடப்பட்டு இருந்தது. கோயில் நிர்வாகம் எதிர்பார்த்த தொகையை விட குறைவாக இருந்ததால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" பிரசாத ஸ்டால் ரூ.4கோடிக்கு மேல் ஏலம் போக வாய்ப்புள்ளதால் மறுஏலம் மே 28ல் நடைபெறும். இதைபோலவே செக்யூட்ரி, துப்புரவு பணி உரிமத்திற்காக தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தபுள்ளி பெறப்பட்டுள்ளது. தகுதியான நிறுவனங்கள் அழைக்கப்பட்டு ஏலம் விரைவில் நடத்தப்படும்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !