உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆகம கிரந்த வகைகள்

ஆகம கிரந்த வகைகள்

காமிகத் தொகையது பரார்த்தம்கி ரந்தமாம்
கனயோ கசம்சிந் தியமும்
கருதிலக் கங்கார ணங்கோடி யசிதமே
காணும் அயுதந் தீப்தமே
நேமமுறு மனுநியுதம் உயிர்சூக்கு மம்பதுமம்
நீள்ச கத்திர வாகம்
நெடியதொகை சங்கமா மஞ்சுமான் ஓரைந்து
நேரி லக்கங் கோடியே
யாமறிஞர் பேசுசுப் பிரபேதம் விசயமோ
வாகுமொரு மூன்று கோடி
அணிகொள்நிசு வாசமொரு கோடியத னிற்பாதி
யாகும் சுவா யம்புவம்
தீமைகெட நீபுகல்வ ரம்புணர்ந் திடுமறைச்
செல்வர்மூ வாயி ரவர்வாழ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !