உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரி பகவதி அம்மன் கோயிலில் ரூ.17 லட்சம் உண்டியல் வசூல்!

குமரி பகவதி அம்மன் கோயிலில் ரூ.17 லட்சம் உண்டியல் வசூல்!

நாகர்கோவில்: கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலில் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் வருகின்றனர். இங்கு பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 17 உண்டியல்கள் உள்ளது. இரண்டு மாதத்துக்கு ஒரு முறை இந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்படும். இந்த உண்டியல்கள் எண்ணப்பட்டது. தேசவம் தொகுதி கண்காணிப்பாளர்கள் சிவராமச்சந்திரன், ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டது. இதில் 17 லட்சத்து மூவாயிரம் ரூபாய் மற்றும் வெளிநாட்டு டாலர்கள் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !