திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா!
ADDED :3807 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகத்திற்கு பின்தங்க அங்கியில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நகரின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் பூத்தட்டு எடுத்து கோயிலுக்கு ஊர்வலமாக சென்று அம்மன் சன்னதியில் பூச்சொரிந்து வழிபட்டனர். பிற்பகலில் அபிஷேகம் நடந்து அம்மன் சந்தனக்காப்பில் வெள்ளி அங்கியில் அருள் பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் இரவு முழுவதும் அம்மனுக்கு பூத்தட்டு, மதுக்குடம் எடுத்துதரிசித்தனர். இரவில் முக்கிய வீதிகளில் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வாகனங்களில் பவனி வந்தார்.