விற்பட்டு ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!
செஞ்சி: விற்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி தாலுகா விற்பட்டு கிராமத்தில் உள்ள பஜனை மடத்தை தற்போது புதுப்பித்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கட்டியுள்ளனர். இக்கோவிலின் மகா கும்பாபி÷ ஷகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 7ம் தேதி மாலை 6:00 மணிக்கு பகவத் பிரார்த்தனை, விஷ்வக்ஷேனர் ஆராதனம், மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், அக்னிப்ராணயம் மற்றும் முதல் கால ஹோமம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், கோ பூஜை, ரக்ஷா பந்தனம், நாடிசந்தானம், யாத்ரா தானமும், 7.45 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 8 மணிக்கு நவக்கிரகங்களுக்கும், 8:15 மணிக்கு திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் முன்னிலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெரு மாள் கோபுர விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் செய்தனர். கும்பாபிஷேக வேள்விகளை திண்டிவனம் நாகராஜ் அய்யர், முருக்கேரி சீனிவாச அய்யர் செய்தனர். விழா குழு தலைவர் ராதாகிருஷ்ணன், மலர், ஸ்தபதி முருகன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.