உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெேயந்திரருக்கு வெள்ளிக் கீரிடம் வைத்து புஷ்பாபிஷேகம்!

ஜெேயந்திரருக்கு வெள்ளிக் கீரிடம் வைத்து புஷ்பாபிஷேகம்!

புதுச்சேரி: காஞ்சி ஜெயேந்திர  சரஸ்வதி சுவாமிக்கு, வெள்ளிக் கீரிடம் வைத்து  புஷ்பாபிஷேகம் நடந்தது. புதுச்சேரி இ.சி.ஆர்., சாலையில்  உள்ள  சங்கர வித்யலாயா மேல்நிலைப் பள்ளியில் நேற்று முதல் 12ம் தேதி வரை  காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள் இருவரும்  திரிபுரசுந்தரி சமேத சந் திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். நேற்று மாலை 6:30 மணிக்கு ஜெயேந்திர சரஸ்வதி  சுவாமிக்கு, விஜயேந்திர சரஸ்வதி சுவாமி  வெள்ளிக் கீரிடம் வைத்து, புஷ்பாபிஷேகம் செய்தார். பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெற்ற பானுபிரியா, மகேஸ்வரி, சுந்தர சுப்ரமணியன் ஆகியோரை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்  பாராட்டி ஆசி வழங்கினார். தினமும் காலை 8:30 மணிக்கு ஆதிசங்கரர் பாதுகைகளுக்கு பாதுகை பூஜை, மாலை 4:00 மணிக்கு நிகழ்ச்சிகள்  மற்றும் இரவு 7:30 மணிக்கு பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !