செல்லியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
ADDED :3810 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் கழனிக்குடியில் உள்ள கூடார செல்லியம்மன் கோயில் சித்திரை திருவிழாநடைபெற்று வந்தது. இதையொட்டி நேற்று காலை தேவிபட்டினம் நவபாஷனத்தில் இருந்து பக்தர்கள் தீர்த்தமாடி, பால்குடத்துடன் வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். கிராமத்தார் சார்பில் உலகம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. பக்தர்கள் கரகம் மற்றும் காவடியுடன் ஊர்வலமாக வந்து இரவு 12 மணிக்கு கோயில் முன் பூக்குழி இறங்கி நேர்த்திகடன் நிறைவேற்றினர்.