செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :3810 days ago
உடுமலை : உடுமலை செல்வ விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. உடுமலை, ஜி.டி.வி. லே-அவுட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் முருகன், பெருமாள், தட்சிணா மூர்த்தி சுவாமிகளின் சன்னதிகள் அமைந்துள்ளன. சங்கடஹர சதுர்த்தியையொட்டி, செல்வ விநாயகருக்கு அபிேஷகம், அலங்காரம், அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது.