சமயபுரம் கோவில் உண்டியல் திறப்பு
ADDED :3810 days ago
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிந்த நிலையில், நேற்று முன்தினம் கோவிலில் உள்ள, 24 உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடந்தது. கோவில் இணை கமிஷனர் தென்னரசு, முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். உண்டியல்களில் 70 லட்சத்து 21 ஆயிரத்து 319 ரூபாய் ரொக்கமும், இரண்டு கிலோ, 952 கிராம் தங்கம், ஏழு கிலோ, 600 கிராம் வெள்ளி, மற்றும் பல்வேறு நாடுகளின் 84 கரன்சி நோட்டுக்கள் இருந்தன.