உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் விழா!

காளியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் விழா!

விழுப்புரம்: அத்தியூர் திருக்கை குங்குமக்காரி காளியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் விழா நடந்தது. விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருக்கை, குங்குமக்காரி காளியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா நடக்கிறது. கடந்த 8ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இரவு 7:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் கிராம பொதுமக்கள் ஊரணி பொங்கல் வைத்து, அம்மனை வழிபாடு செய்தனர். காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !