நடராஜருக்கு சித்திரை திருவோண வழிபாடு!
ADDED :3988 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில், நடராஜருக்கு சித்திரை திருவோண சிறப்பு வழிபாடுநடந்தது. சிவபெருமானுக்கு தினசரி 6 கால பூஜை நடப்பது போன்று, நடராஜருக்கு ஆண்டுக்கு 6 வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று சித்திரை திருவோண வழிபாடு கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் உள்ள சிவகாமி அம்மை உடனுறை நடராஜருக்கு நடத்தப்பட்டது. நேற்று காலை 8:00 மணி முதல் விநாயகர் பூஜை, நால்வர் துதி, திருவாசகம், பஞ்சபுராணம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளை ஓதி, தமிழ்வழிப்படி வழிபாடுகள் நடந்தது. சரக்கொன்றை மலர்களால் அபிஷேகம் செய்து, அலங்கார தீபங்கள் காட்டி, சங்கு மற்றும் பிரம்மதாளம் வாசித்து பூஜைகள் நடத்தப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.