உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொரத்தூரில்108 பால்குட அபிஷேகம்!

சொரத்தூரில்108 பால்குட அபிஷேகம்!

செஞ்சி: சொரத்தூர் பூவாத்தம்மனுக்கு 108 பால் குட அபிஷேகம் நடந்தது. செஞ்சி தாலுகா, சொரத்தூர் பூவாத்தம்மன் கோவில் சித்திரை திருவிழா, நேற்று முன் தினம் துவங்கியது. நேற்று இரண்டாம் நாள் விழாவாக காலை 9:30 மணிக்கு சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, 108 பால் குடம் ஊர்வலமாக எடுத்து வந்து, பூவாத்தம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். பகல் 1:00 மணிக்கு, பூங்கரகம் ஜோடித்து ஊர்வலம் நடந்தது. இரவு விசேஷ வழிபாடும், சாமி ஊர்வலமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !