நத்தம் கும்பாபிஷேகம்!
ADDED :3809 days ago
நத்தம்: நத்தம் அனமலைப்பட்டியில் சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மே 8ல் கங்காதீர்த்த பூஜை, கணபதி ஹோமம், ரக்ஷாபந்தனம், முதல் கால
யாக வேள்வி உள்ளிட்ட பூஜைகளுடன் விழா துவங்கியது. நேற்று காலை இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜை, தீபாராதனையும், நான்காம் கால யாக வேள்வி பூஜை, கடம் புறப்பாடு யாத்திரதானம் நிகழ்ச்சிகள் நடந்தன. பின்பு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறுகுடி, நல்லகண்டம், அனமலைப்பட்டியை சேர்ந்த விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.