உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பாபிஷேக விழா!

கும்பாபிஷேக விழா!

விழுப்புரம்: பொய்யப்பாக்கம் லட்சுமிநாராயண வரதராஜ பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக விழா நடந்தது. விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கம் லட்சுமிநாராயண வரதராஜபெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா, கடந்த 7ம் தேதி மாலை 6:00 மணிக்கு வேத ப்ரபந்த தொடக்க ஹோமம், சாற்றுமுறையும், 8ம் தேதி யாகசாலை நிர்மாணம், கும்ப மண்டல ஆராதனம், முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதியும் நடந்தது. 9ம் தேதி காலை 7:00 மணிக்கு சதுஸ்தான அச்சனம், ஹோமங்கள் மற்றும் மாலை 6:00 மணிக்கு 17 கலசங்கள் பிம்ப சுத்தி திருமஞ்சனம், சதுஸ்தான அர்சனமும், இரவு 8:30 மணிக்கு சயனாதி வாசம் நடந்தது.

இதனை தொடர்ந்து, நேற்று காலை 8:30 மணிக்கு கும்பம் புறப்பாடும், காலை 9 :00 மணிக்கு பெருமாள், தாயார், பரிவார விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !