உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரநாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தெப்ப உற்சவம்!

வீரநாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தெப்ப உற்சவம்!

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார் கோவில் வீரநாராயண பெரு மாள் சித்திரை திருவி
ழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம் நடந்தது. காட் டு மன்னார் கோவில் வீரநாராயண பெரு
மாள் கோவிலில் சித்திரைமாத பிரம்மோற்சவ விழா கடந்த 25ம் தேதி கொடிஏற்றத்துடன் துவங்கியது.

தினசரி சிறப்பு பூஜை, சுவாமி வீதியுலா நடை பெற்றது. 29ம் தேதி இரவு கருட சேவையும், 2ம்
தேதி திருக்கல்யாணம், 4ம் தேதி தேர் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் தெப்ப உற்சவம் நடந்தது.அதனையொட்டி காலை சுவாமிக்கு சிறப்பு திரு மஞ்சனம் நடந்தது. இரவு ருக்மணி சத்தியபாமா சமேத ராஜகோபாலன் தெப்ப உற்சவம் நடந்தது. கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்டு எதிரில் உள்ள பெரிய குளத்தில் இருந்த தெப்பத்தில் ஏறினார். தொடர்ந்து பக்தர்கள் கரகோஷத்துடன்சாமி தெப்பத்தில் உற்சவம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவில் எம்.எல்.ஏ., முருகுமாறன், பேரூராட்சி தலைவர் எம்ஜிஆர்தாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !