உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவில் பாலாலய பூஜை!

பெருமாள் கோவில் பாலாலய பூஜை!

நெல்லிக்குப்பம்: மேல்பட்டாம்பாக்கம் வேட்டை வெங்கட்ராய பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய பாலாலய பூஜை நடந்தது.

மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள பழமையான அலர்மேலு மங்காஸ்ரீதேவி பூதேவி சமேத வேட்டை வெங்கட்ராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்து 45 ஆண்டுகளாகிறது. பராமரிப்பு இல்லாததால் பாழடைந்திருந்த இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பொது மக்கள்முடிவு செய்தனர். அதனையொட்டிஅகிலபாரத ஐயப்ப சேவா சங்கமாவட்ட தலைவர் யாகமூர்த்தி தலைமையில் திருப்பணிக்குழுஅமைத்துதிருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

அதற்காக நேற்று பாலாலய பூஜைகள் நடந்தது. திருக்கோவிலூர் ஜீயர்ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் பூஜைகள் நடந்தது. அறநிலையத் துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், உதவிஆணையர் ஜோதி திருப்பணிக்குழு தலைவர் யாக மூர்த்தி, பேரூராட்சி தலைவர் அர்ச்சுணன், சுந்தரவரத பட்டாச்சாரியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !