உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புஷ்ப பல்லக்கில் பெருமாள் வீதியுலா!

புஷ்ப பல்லக்கில் பெருமாள் வீதியுலா!

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள், புஷ்ப பல்லக்கில், வீதியுலா சென்றார்.

மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில், பிரம்மோற்சவம், கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது. 6ம் தேதி வரை, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், வாகன சேவை நடந்தன.

அதைத் தொடர்ந்து, 7ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் வரை, விடையாற்றி உற்சவம் நடந்தது. நிறைவு நாளான நேற்று முன்தினம், காலை 9:00 மணிக்கு, மகாமண்டபத்தில், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. அன்று மாலை, பெருமாள், ராஜ அலங்காரத்தில், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி, இரவு 7:00 மணிக்கு, வீதியுலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !