உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி கோவிலில் தீமிதி திருவிழா!

அங்காள பரமேஸ்வரி கோவிலில் தீமிதி திருவிழா!

கும்மிடிப்பூண்டி: ஐயர்கண்டிகை அங்காள பரமேஸ்வரி கோவிலில், தீமிதி திருவிழா, சிறப்பாக நடைபெற்றது.

கவரைப்பேட்டை அருகே, ஐயர்கண்டிகை கிராமத்தில்  அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.அக்கோவிலில், கடந்த 1ம் தேதி, முதல் சித்திரை மாத திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான, பக்தர்கள் தங்கள் தீமிதி வழிபாடு, நேற்று முன் தினம் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் தீ மிதித்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். அதற்கு முன்பாக, பார்வதி அம்மன் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஐயர்கண்டிகை மற்றும்  சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதி திரு விழாவில் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.

நேற்று காலை, ஐயர்கண்டிகை கிராமவாசிகள், வீதியுலா சென்ற அம்மனுக்கு படையலிட்டு, ஆடு, கோழிகளை பலி கொடுத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !