காரைக்காலில் கந்தூரி விழா : ரதம் செய்யும் பணி தீவிரம்
ADDED :5287 days ago
காரைக்கால் : காரைக்கால் பெரிய பள்ளிவாசல் கந்தூரி விழாவிற்கு ரதம் மற்றும் பல்லக்கு தயாரிக்கும் பணி வேகமாக நடந்தது வருகிறது. காரைக்காலில் பிரசித்தி பெற்ற பெரிய பள்ளிவாசல் என அழைக்கப்படும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின் 188 வது கந்தூரி விழா வரும் 11ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. அதே தினத்தில் மதியம் 2.30 மணிக்கு ரதம், பல்லக்கு முதலிய ஊர்வலம் நடக்கிறது. மறுநாள் 12ம் தேதி காலை 10 மணிக்கு ஹலவு என்னும் போர்வை வீதி வலமும், 11.30 மணிக்கு மின்சார சந்தனக்கூடு புறப்பாடும், 23ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு வலியுல்லாஹ் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசுதலும் நடக்கிறது. 23ம் தேதி இரவு 9 மணிக்கு கொடி இறக்கம் நடைபெறுகிறது. கந்தூரி விழாவையொட்டி சந்தனகூடு ஊர்வலத்திற்காக ரதம், பல்லக்கு தயாரிக்கும் பணி பல இடங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.