ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் கோவிலில் மூன்றாம் ஆண்டு விழா
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ தட்ஷண ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் கோவிலின் மூன்றாம் ஆண்டு விழா நடந்தது. முதல் நாள் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமத்துடன் விழா துவங்கியது. இரண்டாம் நாள் ஆரத்தி, சன்ஸ்தான் குழுவினர் பஜனை, பாபா சத்சரித நாட்டிய கலை நிகழ்ச்சி ஆகியன நடந்தன. மூன்றாம் நாள் டில்லி தர்சிம் ராஜ் கபூர் பாபா பாடல்கள், இன்னிசை கச்சேரி ஆகியன நடந்தன.அன்று மாலை, எண் 4 வீரபாண்டி பூங்கா நகர் ஸ்ரீ கிருஷ்ண கிருபா பஜன் மண்டல் குழுவினரின் நாம சங்கீர்த்தனம், படுகா பஜனை பாடல்களுடன் நடன நிகழ்ச்சியும் நடந்தது. ஆண்டு விழாவையொட்டி, மூன்று நாட்களும் அன்னதானம் வழங்கினர். பெரியநாயக்கன் பாளையம், துடியலுார், காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மாதேஷ்வரா அறக்கட்டளை கோவில் அறங்காவலர்கள் தர்மலிங்கம், ராஜ் செய்திருந்தனர்.