உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் விழா தொடக்கம்

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் விழா தொடக்கம்

காரைக்குடி: காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் செவ்வாய் திருவிழா, நேற்று காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார். விழா நாட்களில் நாள்தோறும் காலை 9 மணிக்கு வெள்ளிக்கேடயத்தில் அம்பாள் புறப்பாடும், பக்தி உலாவும், இரவு தீபாராதனை, பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 19-ம் தேதி நடக்கிறது. அன்று காலை வெள்ளிக்கேடயத்தில் அம்பாள் புறப்பாடும், காலை 10.45 மணிக்கு மேல் அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 20-ம் தேதி காலை 9 மணிக்கு அங்கிருந்து தேர் புறப்பட்டு கொப்புடையம்மன் கோயில் வந்தடைகிறது. 21-ம் தேதி இரவு 11 மணிக்கு தெப்ப திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் செல்வி செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !