கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயில் பால்குடம்
கொடைக்கானல்: கொடைக்கானல் ஆனந்தகிரி பெரியமாரியம்மன் கோயிலில் கடந்த ஏப்ரல் 21 ந்தேதி கொடியேற்று விழா மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கோயில் திருவிழா துவங்கியது. தினமும் அரசு அலுவலகங்கள், தனியார் சார்பாக அம்மனுக்கு மண்டகப்படிகள் நடத்தப்பட்டு மின் விளக்குகள் மற்றும் மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு இடத்திற்கும் அம்மன் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். நேற்று ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு விரதமிருந்து, பால்குடங்கள் சுமந்தபடி வந்து பெரியமாரியம்மன் கோயிலில் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். கோயில் திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கொடைக்கானல் வட்டார இந்து மகாஜன சங்கம், இந்து முன்னனி, விவேகானந்தா இந்து இயக்கம், ஆனந்தகிரி இளைஞரணி ஏற்பாடுகளை செய்திருந்தனர். நகர் மன்ற தலைவர் ஸ்ரீதர், கோயில் நிர்வாகிகள் முரளி, வேலுச்சாமி, ஜெயராமன் கலந்து கொண்டனர்.