சூசையப்பர் தேவாலயத்தில் 150வது ஆண்டு பெருவிழா
ADDED :3799 days ago
குன்னுார் : குன்னுார் வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் உள்ள புனித சூசையப்பர் தேவாலயத்தில், 150வது ஆண்டு ஜூபிளி ஆண்டு பெருவிழா நடந்தது. குன்னுாரில் மிகவும் பழமைவாய்ந்த பேரக்ஸ் புனித சூசையப்பர் தேவாலயத்தின், 150வது ஆண்டு ஜூபிளி திருவிழா, கடந்த மார்ச் மாதம், 21ம் தேதி துவங்கியது.தொடர்ந்து, ஏப்ரல் 12ம் தேதி இளையோர் நாள் நிகழ்ச்சியில், திருப்பலி, இளையோரின் கலந்தாய்வு, ஒப்புரவு அருட்சாதனம், குழந்தைகளுடன் கலந்தாய்வு, தியானம் ஆகியவை நடந்தன. 26ம் தேதி தம்பதியர் நாள் கலந்தாய்வு நடந்தது. கடந்த, 3ம் தேதி கொடி பவனி, கொடியேற்றம், திருப்பலி, பங்கு மக்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தது. 4ம் தேதியில் இருந்து நவநாள் திருப்பலி, மறையுரை ஆகியவை நடந்தன. தொடர்ந்து, 150வது ஆண்டு ஜூபிளி திருவிழா நடத்தப்பட்டது.