சுந்தரராஜ பெருமாள் கோவிலில் 17ம் தேதி கொடியேற்றம்
ஆர்.கே.பேட்டை: சுந்தரராஜ பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவ விழாவில், 17ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. ஆர்.கே.பேட்டை சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. மார்கழி உற்சவம், பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட உற்சவங்கள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 16ம் தேதி மாலை, அங்குரார்ப்பணம், ஆச்சார்ய வரணத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்குகிறது; மறுநாள், அதிகாலை 4:00 முதல், 5:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது; அன்று மாலை 6:00 மணிக்கு, சேஷ வாகனத்தில் உற்சவர் எழுந்தருளுகிறார். 22ம் தேதி, தேர் திருவிழா நடைபெற உள்ளது; 23ம் தேதி ஊஞ்சல் சேவையுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
நாள் உற்சவம்
மே 16 அங்குரார்ப்பணம்
மே 17 கொடியேற்றம்
மே 18 சிம்ம வாகனம்
மே 19 சந்திர பிரபை
மே 20 கருட சேவை
மே 21 அனுமந்த வாகனம்
மே 22 தேர் திருவிழா
மே 23 ஊஞ்சல் சேவை