உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி விநாயகர் கோவில் மே 22ல் கும்பாபிஷேகம்

சக்தி விநாயகர் கோவில் மே 22ல் கும்பாபிஷேகம்

ராசிபுரம்: பட்டணம் சக்தி விநாயகர் கோவிலில், வரும், 22ம் தேதி கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடக்கிறது. ராசிபுரம் அடுத்த, பட்டணம் காந்திசாலையில், சக்தி விநாயகர் கோவில் திருப்பணி, மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், வரும், 22ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய, கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். விழாவை முன்னிட்டு, வரும், 21ம் தேதி, காலை, 7 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, கணபதி மற்றும் நவகிரக ஹோமம் நடக்கிறது. காலை, 9 மணிக்கு, ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் இருந்து, காவிரி தீர்த்தம் கொண்டு வருதல், மாலை, 4 மணிக்கு, கணபதி பூஜை, மகா சங்கல்பம், புண்யாகம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேஷமும் நடக்கிறது. தொடர்ந்து, இரவு, 9 மணிக்கு, துவாரபூஜை, கும்ப அலங்காரம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும், 22ம் தேதி, காலை, 6 மணிக்கு, மூர்த்தி மூலமந்திரம், கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. அதைதொடர்ந்து, காலை, 9 மணிக்கு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவில், பங்கேற்கும் பக்தர்களுக்கு அனைவருக்கும் அன்னதனாம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !