உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்ட பந்தனம் செய்முறையும் சாத்து முறையும்!

அஷ்ட பந்தனம் செய்முறையும் சாத்து முறையும்!

கொம்பரக் கொருபங்கு திரிபங்க தேகருங்
குங்கிலியம் மூன்று சுக்கான்
கொண்டமுக் காற்பங்கு காவிக்கல் வெண்மெழுகு
கூறுநவ நீதம் மூன்று
செம்பஞ்ச தத்தொகை யிலிங்கமே காற்பங்கு
சேர்த்திடித்து இளமெ ழுகுபோல்
செய்வதுயர் அட்டபந் தனவிதிய தென்றுமறை
செப்பினை யிலிங்க மாதி
விம்பபீ டத்தணிந்து உயர்சம்பு ரோட்சணம்
வியன்பொழு தில்அபி டேகமா
விதிசெய அமைத்தனைகொல் அதுபெயர்ந் திடிலரசு
வியனி ராச்சிய விநாசம்
செம்பதும வல்லிதனது அம்புயநவ் வீடெனத்
தினமும்அக லாது வாழும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !