உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கெங்கையம்மன் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

கெங்கையம்மன் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

வேலூர்: குடியாத்தத்தில், கெங்கையம்மன் தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி 1ம் தேதி அம்மன் சிரசு ஊர்வலம் வெகு சிறப்பாக நடக்கும். இந்தாண்டு அம்மன் சிரசு திருவிழாவையொட்டி காப்பு கட்டுதல் கடந்த வாரம் நடந்தது. நேற்று முன் தினம் கெங்கையம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று மாலை 4 மணிக்கு கெங்கையம்மன் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். தேர் சிப்பாய் முனிசாமி தெரு வழியாக புறப்பட்டு, தர்ணம் பேட்டை பிள்ளையார் கோவில் தெரு, பஜார் தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தேரோட்டத்தின் போது ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் மீது வீசி வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் சிரசு ஊர்வலம் திருவிழா இன்று (15ம் தேதி) நடக்கிறது. காலை 6 மணிக்கு தொடங்கும் சிரசு ஊர்வலம் 9 மணிக்கு கோவிலை வந்தடையும். அம்மனை தரிசிக்க வேலூர், திருவண்ணாமலை, ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலத்தில் இருந்து இரண்டு லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. விழாவையொட்டி எஸ்.பி., செந்தில்குமாரி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !