அப்பர் பெருமானுக்குத் திருமஞ்சன வழிபாடு!
ADDED :3798 days ago
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகில், களிமேடு பகுதியில், அப்பர் பெருமான் முக்தி பெற்ற தினமான, சித்திரை சதய நாளில், குருபூஜை விழா நடந்து வருகிறது.நேற்று, அப்பர் மடத்தில் மங்கள இசையுடன் குருபூஜை விழா துவங்கியது. அப்பர் பெருமானுக்குத் திருமஞ்சன வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து, மாலையில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இரவு, 300 ஆண்டு பழமை வாய்ந்த அப்பர் ஓவியம் மலர்களால், அலங்கரிக்கப்பட்டு, திருத்தேரில் வீதியுலா நடந்தது.