உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூண்டி மாதா சிற்றாலயத்தில் நாளை தேர் திருவிழா

பூண்டி மாதா சிற்றாலயத்தில் நாளை தேர் திருவிழா

தங்கவயல்: சாம்பியன் ரீப் பகுதி, பி.ஜி.எம்.எல்., மருத்துவமனை காலனியில் அமைந்துள்ள பூண்டி மாதா சிற்றாலயத்தில், நாளை தேர் திருவிழா நடக்கிறது. சிற்றாலய தேர் திருவிழாவை முன்னிட்டு, இன்று மாலை, 6:00 மணிக்கு அருட்தந்தை டோம்னிக் சேவியர், கொடியேற்றி, பிரார்த்தனை ஜெபம் செய்கிறார். நாளை காலை, 7:30 மணிக்கு வெற்றி அன்னை ஆலயத்தில் சிறப்பு வழிபாடு, அதை தொடர்ந்து சிற்றாலயம் அருகே, விளையாட்டு போட்டிகள், மதியம் அன்னதானம், சிறப்பு பிரார்த்தனை மற்றும் மாலை, 6:00 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !