உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோளீஸ்வரர் கோவிலில் ருத்ராட்ச அபிஷேகம்

சோளீஸ்வரர் கோவிலில் ருத்ராட்ச அபிஷேகம்

திருவள்ளூர்: சோளீஸ்வரர் கோவிலில் நேற்று, மூலவருக்கு ருத்ராட்ச அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பேரம்பாக்கம் பகுதியில், காமாட்சி சமேத சோளீஸ்வரர் கோவிலில் நேற்று, வைகாசி அமாவாசையையொட்டி, ருத்ராட்ச அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 9:00 மணிக்கு, மூலவரான சோளீஸ்வரருக்கு, ருத்ராட்சத்தால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, கைலாய வாத்தியங்கள் முழங்க, சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், பேரம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், மூலவரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !