உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை விழா!

மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை விழா!

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நேற்று அமாவாசை தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில் வெளி மாவட்டங்களை  சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்தும்   அதிகமான பக்தர்கள் வருகின்றனர். தினந்தோறும்  கோவில் நடை  காலை, 6:00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு, 8:00 மணிக்கு அடைக்கப்படும்.  அமாவாசை தினத்தை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் காலை, 6:00 மணிக்கு திறக்கப்பட்ட நடை பக்தர்கள் தரிசனத்திற்காக இரவு முழுவதும் திறக்கப் பட்டிருந்தது. வெளி மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் இரவு முதலே வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று காலை, 6:30,  11:30, மாலை, 6:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பொது தரிசன வழி மட்டுமின்றி சிறப்பு தரிசன வழியிலும் பக்தர்கள் கூட்டம்  அலைமோதியது. அமாவாசை சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை, கோவில் உதவி ஆணையர் கார்த்திக்,  மற்றும் கோவில் பணியாளர்கள் செய் திருந்தனர். விடுமுறை நாளில் அமாவாசை வந்ததால் நேற்று வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால், ÷ காவிலுக்கு வெளியேயும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று மாசாணியம்மன் கோவிலுக்கு பொள்ளாச்சி, பழநி,  மதுரையிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !