உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தில்லைக்காளியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை!

தில்லைக்காளியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை!

சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி பெண்கள் அகல் விளக்கு ஏற்றி வைத்து சிறப்பு பூஜை செய்தனர். சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவிலில் வைகாசிப் பெருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி தினம்  தில்லைக்காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வீதி புறப்பாடு செய்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். உற்சவத்தில் 12ம் தேதி தெரு வடைச்சான், 16ம் தேதி தேரோட்டம், நேற்று தில்லைக்காளியம்மன் புறப்பாடு செய்து சிவப்பிரியை குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடந் தது. நேற்று அமாவாசையையொட்டி தில்லைக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான  பக்தர்கள் குறிப்பாக பெண்கள் அம்மன் சன்னதி மற்றும் கால பைரவர் சன்னதி முன் அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !